நாவலம்பதி

நாவலம்பதி,காட்டுமலைக் கந்தன் ஆலய வரலாறு

தமிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வானத்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான் கோயில் கோயில் கொண்டருளிய வரலாறு புதுமையானது.

காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டது(80) நாவலம்பதியிலே வசித்த சீனியர் என்னும் அருளாளன் தமக்குற்ற தீரா நோயைத்தீர்க்கு முகமாக ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு (1928) கதிர்காம யாத்திரையை மேற்கொண்டார். அக்காலம் இந்த யாத்திரை அச்சம் தருவதும், அருமையுடையதும் புனிதமுள்ளதுமான ஒரு தவப்பேறாகும். காடும் மலையும் கடந்த அருளாளன் சீனியர் அவர்கள் கதிர்காமத்தை அடைந்து, அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு கதிர்காம வேலவன் பவனி கண்டு கதிரமலை ஏறிக் கந்தனைத் தோத்தரித்து கற்பூரத் தீபமேற்றி விபூதிப் பிரசாதத்தோடு துணையாக வயது முதிர்ந்த ஒரு தம்பதிகளுடனும் ஊர் திரும்பினார். பண்டாரம் போல் வடிவம் தாங்கி வந்த தம்பதிகளுடன் நாவலம்பதி வந்தடைந்து தாம் வதியும் மனைக்குச் சென்றார்(தற்போதய அன்னதான மடம்). வீடு வந்து சேர்ந்தவர்கள் கால் கழுவி வர கிணற்றடிக்குச் சென்றனர். அவ்வேளை துணையாக வந்த தம்பதிகளைக் காணது அருகில் உள்ள கொன்றை மரச் சோலையிலே தேடிப்பார்த்தார். அவர்களைக் காண முடியவில்லை. கந்தனையே வேண்டியவ ண்ணம் தன் மனை புகுந்தார்.


ஊழ்வினை வசத்தால் வந்த நோய்க்கு விபூதியே மருந்தாக எண்ணி அவர் வாழ்ந்தார். நோய் மேன்மேலும் வருத்தியது. கந்தன் கழலிணையே தஞ்சமென எண்ணி நைந்துருகினார். ஒருநாள் முருகன் கனவிலே தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த வீபூதிப் பிரசாதத்துள் வேல் இருப்பதையும் அதனை ஒரு புனிதமான இடத்தைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் எனக் கூறிப் போந்தார். அருளாளராகிய சீனியர் தாம் கண்ட கனவின்படியே ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் (1929) ஆனித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் கதிரமலைக்கந்தனின் அனுக்கிரகத்தோடு கதிர்காம வழி காட்டுமலைக் கந்தனின் ஆலயத்தை நிறுவினார்.
கோயிலை நிறுவிச் சுவாமியைப் பிரதி~;டை செய்ததோடு தாமே பூசகராய் அமர்ந்து நித்திய பூசைகளும் செய்தார். தமிழ்வேதமாகிய தேவாரம், திருவாசகங்களையே மந்திரமாகக் கொண்டு அவர் அன்போடு செய்த பூசை வெகுவிரைவில் பலன் அளித்தது. நோய் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. அருளாளர் மனம் மகிழ்ந்தார். காட்டுமலைக் கந்தன் கருணையை எண்ணி வியந்தார்.

காட்டுமலைக் கந்தனின் அருட்செயல்கள் யாழ் குடாநாடு எங்கும் பரவுவதாயிற்று. தீராநோய்த் தீர்ந்தருள வல்லான் என்ற செய்தியை நாடெங்கும் பரவுவதாயிற்று. வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர். அருளாளர் சீனியர் அவர்கள் அப்பனை வணங்கி வெந்துயர் தீர்க்கும் விபூதியை அளித்துப் பலரைக் குணமாக்கினார். இச்செய்தி நாடறிந்ததொன்று. அருளாளராகிய சீனியர் அவர்கள் 1949ம் வருடம் சிவப்பேறு அடைந்து விட்டார். அவரின் பின் அவரின் மூத்த புதல்வன் சீ.சிவகுரு அவர்கள் ஆலய பரிபாலனத்தை ஏற்றுக்கொண்டார். தர்மகர்த்தாவாகவும் பிரதம பூசகராகவும் விளங்கினார். சிவகுருவுக்கு உதவியாக அவரது சகோதரர் குமரகுருவும் அரும்பணியாற்றினார். நாவலம்பதி சைவப் பெருமக்களின் உதவியுடன் இக் கோவிலை நன்கு பரிபாலித்து வேண்டிய திருத்தங்களைச் செய்து அழகும் புனிதமும் பேணி நித்திய பூசைகளிற் கவனம் செலுத்தி வந்தனர்.

இக்கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருக்கவும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் விநாயகரும் அம்மையும் வைரவரும் காளியும் பழனியாண்டவரும்; பரிவார மூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். ஆலயம் தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து 1971 ம் ஆண்டு வரை (1929 1971) ஆறுமுகப் பெருமானுக்கு விசேட உற்சவமாக ஆனி அமாவாசை தொடக்கம் ஆனிப்பூரணை வரை திருவிழாக்கள் (15) நடைபெற்று வந்தன.

மூவைந்து தினங்கள் வெற்றி வடிவேலுடன் வீதி வலம் வந்த காட்டுமலை வேலனது திருத்தல வரலாற்றில் ஓர் புதுமை நிகழ்ந்தது. அவனருயாலே அவன் வாக்கிற்கமைய 1972 ம் ஆண்டில் திருவிழாவில் மாற்றம் செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்து வரும் ஆறாவது தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி அமாவாசை அன்று தீர்த்தோற்சவம் நிகழும் வண்ணம் 25 தினங்கள் திருவிழா நடைபெறுகின்றன. இவ்விழாக்களோடு அம்மைக்குரிய நவராத்திரி;பூசைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவைகளே அன்றி கார்திpகை உற்சவங்கள் (மாதந்தோறும்) சூரசம்ஹாரம் வருடப்பிறப்பு,; தைப்பொங்கல் தைப்பூசம் என விசேட திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

25 திருவிழாக்களில் முக்கியமானவை.
1. கொடியேற்றம்
2. உருத்திரநாயகி உற்சவம்
3. வைகாசி விசாக உற்சவம்
4. மஞ்ச உற்சவம்
5. அமிர்தவல்லி சுந்தரவல்லி உற்சவம்
6. தெண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத்திருவிழா)
7. கைலாசவாகன உற்சவம்
8. கார்த்திகை உற்சவம் / சிவகுரு ஐயர் குருபூசை
9. சப்பறத்திருவிழா
10. இரதோற்சவம்
11. தீர்தோற்சவம்
12. பூங்காவன உற்சவம்
13. வைரவர் உற்சவம்
முதலிய உற்சவங்கள் விவேடமாகக் குறிப்பிடக்கூடியவை.

இவ்வாலயத்தின் தீர்த்தத்திருவிழா புதுமையானது. செல்வச்சந்நிதி ஆலயத்தினின்றும் பெருகி வரும் தொண்டைமானாறானது வல்லைப் பெரும் பாலத்துக்கூடாக அச்சுவேலிப்பகுதிக்குட் புகுந்து நாவலம்பதியை அடைந்து அப்பாலும் பாய்கிறது. நாவலம்பதியில் இந்த ஆறு வயல்களை உப்பாக்காதவாறு வரம்பெடுத்துத் தடுக்கப்பட்டிருக்கிறது. காட்டுமலைக்கந்தன் ஆலயத்தினின்றும் ஏறக்குறைய அரை கிலோமீற்றர் து}ரமுள்ள இவ்வாற்றுப்படுக்கையிலே புனிதமான குண்று எப்போதும் கடும் வறட்சியான கோடை காலத்திலேயுங்கூட நீர் சுரந்து கொண்டிருக்கிறது. அதிகம் ஆழமில்லாத இக்குண்று சிறு கிணறு போல் கட்டப்பட்டிருக்கின்றது. இப்புனித இடம் கூட கந்தனின் அருளால் கனவிலே காட்டப்பட்ட இடமாகும். இவ்விடத்திலே தான் காட்டுமலைக்கந்தன் பக்தர்கள் புடைசூழ அரோகராச்சத்தம் ஒலிக்கத் தீர்தமாடித் திரும்புகிறான்.

இத்தீர்த்தத்துக்கு இன்னொரு விசேடமும் உண்டு. கோவில் கட்டப்பட்ட வருடத்திலிருந்து 1971ம் ஆண்டு வரை (1929-1971) இக்கொடியேற்றத்தினத்திலன்று இப்புனிதக் குண்டிலிருந்து தீர்த்தம் கொண்டு செல்லப்பெற்று அதுவே எண்ணெயாகத் திரிதோய்க்கப்பெற்று பதினைந்து நாளும் தீர்த்த விளக்காக எரிக்கப்பெற்று வருகிறது.காட்டுமலை திருத்தல வரலாற்றில் அருளாளர் சீனியர் அவர்களால் கட்டப்பெற்று முடிக்கப்படாமலிருந்த திருப்பணி வேலைகள் பலவற்றைத் திருத்தமாகவும் அழகாகவும் பிரதமகுரு சிவகுரு ஐயா செய்து முடித்தார் 1960களில் கோவிலை புனரமைப்புச் செய்து அழகு மிக்க திருத்தலமாக காட்டுமலைகந்தசுவாமி கோயிலைத் நிர்மாணித்த பெருமை தர்மகர்த்தா பிரதமகுரு சீ.சிவகுருவிற்கே உரியதாகும்.மீண்டும் ஆலயத்தைப் புனரமைப்புச் செய்ய எண்ணி 1997 ம் ஆண்டு தற்போது பொலிவுற்று விளங்கும் ஆலயத்தை அமைக்கும் திருத்தொண்டு மேற்கொள்ளப்பெற்று 2000ம் ஆண்டு கும்பாபிN~கம் நடைபெற்றது. காட்டுமலைகந்தனின் கட்டுத்தேர் தொடர்ந்து செயற்பட முடியாமையினால் 1971ம் ஆண்டு அழகிய சித்திரத்தேர் செய்யப்பெற்று ஆறுமுகப்பெருமான் சித்திரத்தேரிலேறி அருளாட்சி புரிந்து வருகின்றான்.

1986 ம் ஆண்டு திருமஞ்சம் செய்யப்பெற்று எம்பெருமான் மஞ்சத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றான். மேலும் மணிக்கூட்டுக் கோபுரமும் கட்டப்பெற்றுள்ளது. இவ்வாறான அரியபெரிய திருப்பணிகளாற்றி ஆலயத்தைப் புதுப் பொலிவுபெறச்செய்திருந்த காலத்தில் 2004.06.15ம் திகதி கார்த்திகை நட்சத்திரமும் கூடிய வேளை பிரதமகுரு சிவகுரு ஐயா அவர்கள் சிவப்பேறு பெற்றார். காட்டுமலைகந்தசுவாமி கோயில் பிரதமகுருவும் தர்மகர்த்தாவுமாகிய அருட்செல்வர் சிவகுரு சிவப்பேறு அடைந்து விடவே அவர் விட்டுச்சென்ற தெய்வீகப்பணியை அவரது சிரே~;ட புத்திரனாகிய சிவகுரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து சிறப்புறச்செய்து வருகின்றார்.

நாவலம்பதி மக்களின் பக்திமேலீட்டையும் சகோதரன் சி.பாலசுப்பிரமணியம், பிள்ளைகள் சி.சிவானந்தன், சி.விசாகேந்நதிரன் ஆகியோரது துணையையும் பெற்று காட்டுமலைகந்தனுக்குரிய திருப்பணிகளைச் செவ்வனவே நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். ஆலயத்தின் முகாரமயாளராகவும் பிரதம பூசகராகவும் விளங்கும் சிவகுரு சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்தின் மணிமண்டபத்தை சிறப்பான முறையில் தெய்வீக சிறப்பு மிக்கதாக அமைப்பதில் ஆர்வம் கொண்டு 2006.11.04 அன்று தைப்பூச நாளில் அடிக்கல் நாட்டி இத்திருப்பணியை நிறைவு செய்துள்ளார். அவ்வண்ணம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற சான்றோர் வாக்கிற்கமைய காட்டுமலையில் கோபுரமில்லாத குறையைத் தீர்த்து வைக்க எண்ணி 2008.01.22 ஆம் திகதி தைப்பூச நாளில் இராஜகோபுர திருப்பணிக்கான திருக்கல் நாட்டப்பெற்றது. இராஜகோபுர திருப்பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதமகுரு சி.சிவசுப்பிரமணியம் அவர்களது சகோதரர் சி.பாலசுப்பிரமணியம் அவர்கள் அண்ணனின் வழிகாட்டலின் கீழ் ஆலயப்பணிகளில் சிறப்பாக பணியாற்றி துணையாக நின்று தொண்டு புரிகின்றதுடன் ஆலய பூசகர்களுள் ஒருவராகவும் விளங்குகின்றார்.தர்மகர்த்தா அவர்களின் சிரேஷ்ட புத்திரன் பூசகர் சிவானந்தன் மற்றும் கனிஷ்ட புத்தின் பூசகர் விசாகேந்திரன் ஆகியோர் ஆலயப்பணிகள் செம்மையாக நடைபெற துணையாக நின்று உதவுகின்றனர்.

விநாயகராலயம், சக்தி ஆலயம், என பல ஆலயங்கள் சுற்றிலும் நிரம்பியுள்ள அச்சுவேலி நாவலம்பதியிலே உள்ள முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டு ஏறக்குறைய 300 குடும்பத்தினர் செல்வத்தோடும் சீர்சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள். கொண்டிருக்கிறது. இவர்கள் மாத்திரமல்ல அயற்கிராமங்களிலிருந்தும் ஏராளமான அடியார்கள் வந்து கந்தனை வந்தனை செய்து திரும்புகிறார்கள். இக்கோவிலை ஸ்தாபித்த அருளாளர் சீனியர் அவர்களால் காட்டுமலைக்கந்தப் பெருமான் மீது பாடப்பெற்ற சில பாடல்களும் அச்சுவேலி தம்பிமுத்துப் பாகவதர்களால் பாடப்பெற்ற ஊஞ்சற் பதிகமும் சி.சிவலிங்கம்,இராஜினிதேவி அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற புதிய பிள்ளைத்தமிழ் நு}லும் கு.கணேசன் அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற அருட்பாடல்கள் என்ற நு}லும் பரமானந்தம்.தர்சினி தமது பட்டப்படிப்பிற்காக சமர்ப்பித்த காட்டுமலைக்கந்தசுவாமி கோவில் ஒரு ஆய்வு என்ற நு}லும் சி.பாலமுரளி என்பவரால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தன் புகழ்பாடி என்ற நு}லும் பொ.சகலகலாநிதி அவர்களால் பாடப்பெற்ற பதிகநு}லும் இக்கோவிலுக்குண்டு. மேலும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கந்தன் புகழ் பாடி அவனருள் பெற்று உய்வார்களாக.ஆறுமுகப் பெருமான் து}ய வேட்டுவகுலத்தோடு ஆடிப்பாடிஅலைந்து குலைந்து கதிர்காமத்திலுறைகின்றான். அவனே நாவலம்பதியில் நம் வினை தீர்க்க எழுந்தருளியுள்ளான். அவனைக் கண்டு காலால் அவனை வலஞ்செய்து பண்ணால் உருகிப்பாடி பணிந்து அருள் பெறுவோமாக.

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net